எளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

எளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

260

எளம்பலூர் அருகே சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்பு.

Perambalur news: Rescue of baby girl found on roadside near Elambalur.

எளம்பலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட ஓரிரு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இந்த கொடுரமான காரியத்தை செய்த தாயை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

பெரம்பலூர் அருகே எளம்பலூர் சேர்ந்த தனபால் மனைவி பஞ்சவர்ணம் நேற்று காலையில் பெரம்பலூர்-எளம்பலூர் புறவழிச்சாலையில் நடைபயிற்சியில் இருந்தார். அந்த சமயத்தில் சாலையோரப் பாலத்தின் அருகே ஒரு பையை நாய் கவ்வி இழுத்தது. அந்த பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பஞ்சவர்ணம் உடனடியாக நாயை விரட்டிவிட்டு அந்த பையை திறந்து பார்த்துள்ளார். துணியினால் சுற்றப்பட்டு பிறந்து ஓரிரு நாட்களே ஆன பெண் குழந்தை அந்த பையினுள் இருந்ததை கண்டு மேலும்  அதிர்ச்சியடைந்தார். தான் பார்த்ததை குறித்து தனது அண்ணன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு அண்ணன்களின் உதவியுடன் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

வேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

ரோட்டோரத்தில் பெண்குழந்தை கண்டெடுத்ததை குறித்து பெரம்பலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் விரைந்து சென்றனர். காவலர்கள் பஞ்சவர்ணம் குடும்பத்தாரிடம் இருந்து குழந்தையை வாங்கி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

பிறந்து தொப்புள் கொடி அகற்றப்படாத பெண் குழந்தையை சாலையோரத்தில் வீசிச்சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tag: perambalur, perambalur news, perambalur news today
Leave a Reply

%d bloggers like this: