எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம்.

எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம்.

195

எல்லையில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம்.

Perambalur tribute to the soldiers who died.

இந்திய எல்லையில் மரணமடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட 20 வீரர்களுக்கு பெரம்பலூரில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

சீனாவுடன் நடைபெற்ற போரில் வீரமரணமடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனி உள்பட 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்தும் வகையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

[the_ad id=”7251″]

வெப்பூர் ஏரியில் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்.

பெரம்பலூர் இளைஞர்கள் இயக்கத்தின் தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளர் கோபிநாத், காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி, கைகளில் மெழுவர்த்திகளை ஏந்தி மவுன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இளைஞர் இயக்க நிர்வாகிகள் பிரதீப், பிரபு, பிரகாஷ், உதிரம் நாகராஜ், அருண் பிரசாத், ராம் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

[the_ad id=”7250″]

tag: perambalur

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: