ஊராட்சி செயலர் பதவியை நீக்கம் செய்யகோரி புகார் மனு.

417

ஊராட்சி செயலர் பதவியை நீக்கம் செய்யகோரி புகார் மனு.

ஊராட்சி செயலர் பதவியை நீக்கம் செய்யகோரி புகார் மனு. பெண் ஊராட்சி மன்ற தலைவரை தரக்குறைவாக பேசி, நாற்காலிகள் கொண்டு தாக்க முயற்சித்த ஊராட்சி செயலாளர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி வேப்பந்தட்டை ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய அளவிலான ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமை ஏற்றார். முன்னிலை செயலாளர் கஜேந்திரன் வகித்தார். இந்த கூட்டத்தில் பாண்டகபாடி ஊராட்சி மன்ற தலைவர் சுதா என்பவரை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசி நாற்காலிகள் தாக்க முயற்சித்த ஊராட்சி செயலாளர் மாணிக்கவாசகம் என்பவரை பதவி நீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

பள்ளிகள் எப்போது திறக்கலாம்? பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் அரசு..

தாஜ்மஹாலில் இடி விழுந்து மும்தாஜ் கல்லறை சேதம்..!

கூட்ட முடிவில் வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 29 ஊராட்சி மன்றங்களின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டமைப்பின் சார்பாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவை வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகனிடம் நேரில் கொடுத்தனர்.
Leave a Reply

%d bloggers like this: