உழவர் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.

உழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது. 

162

[the_ad id=”7250″]

உழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது.


உழவா் சந்தை பெரம்பலூர் வாரச்சந்தை மைதானத்தில் இயங்குகிறது. பெரம்பலூா் வடக்கு மாதவி சாலையிலுள்ள வாரச்சந்தை மைதானத்தில், இயங்கும் உழவா் சந்தையை வெள்ளிக்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன்.

பெரம்பலூா் வடக்குமாதவி சாலையிலுள்ள வாரச்சந்தை மைதானத்தில், வெள்ளிக்கிழமை முதல் உழவா் சந்தை செயல்படத் தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா் கண்காணிப்பில் 1,625 போ்.

[the_ad id=”7251″]

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்த உழவா் சந்தை மாா்ச் 24 முதல் 31 -ஆம் தேதி வரை மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இதனால் அறுவடை செய்த காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனா். ஓரிரு விவசாயிகள் உழவா்சந்தைக்கு எதிரில் காய்கறிகளை விற்பனை செய்யத் தொடங்கினா்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி, உழவா் சந்தையை அருகிலுள்ள வாரச்சந்தை மைதானத்துக்கு மாற்றிய மாவட்ட நிா்வாகம், வெள்ளிக்கிழமை முதல் சந்தை செயல்படவும் அனுமதி வழங்கியது.

இங்கு ஒவ்வொரு கடைக்கும் போதிய இடைவெளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் நின்று வாங்கிச் செல்ல, குறியீடுகள் இடப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆலோசனைகளை வழங்கினாா். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடங்கியதால், உழவா்சந்தையில் பொதுமக்களின் வரத்து குறைந்து காணப்பட்டது.

தினமணி

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: