உணவுப் பாதுகாப்புத் துறை

உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற புதிய இணையதளம்: ஆட்சியர் வே. சாந்தா.

130

உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற புதிய இணையதளம்: ஆட்சியர் வே. சாந்தா.

உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறுவதற்கு புதிய இணையதளம் உறுவாக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தெரிவித்துள்ளார். 

Perambalur news: New website for food safety license

இது சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அனைத்து வகை உணவு வணிகர்களும், தமிழ் நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை பெற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன்பு https://foodlicensing.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பொருள்களின் தயாரிப்புக்கு உரிமம் பெற்ற தயாரிப்பாளர்கள், தற்போது https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில், பழைய இணைய தளத்துக்கான அதே பயனாளர் அடையாளப் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகிவற்றைப் பயன்படுத்தி உள் நுழைந்து, தரம் நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தேர்வு செய்து உரிமத்தை திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

இதற்காக கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு ஆட்சியரக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை 04328-224033 என்ற தொலைப்பேசி எண்ணின் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

tag: perambalur, perambalur news
Leave a Reply

%d bloggers like this: