பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் விநியோகம் தொடா்பான குறைதீா் முகாம்

56

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் விநியோகம் தொடா்பான குறைதீா் முகாம்.

[the_ad id=”7250″]

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைகளைக் களைவதற்கு சிறப்பு குறை தீா்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூா் வட்டம், புதுநடுவலூா் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பெ. விஜயன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூா் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் வீ. கங்காதேவி தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பெரியவடகரை கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் கிறிஸ்டி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், சாத்தனூா் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளா் கே.கே. செல்வராஜ் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் குறைதீா் முகாம் டைபெற உள்ளது. மேற்கண்ட முகாமில் சம்பந்தப்ப்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
[the_ad id=”7250″]
[the_ad id=”7251″]
[the_ad id=”7252″]Leave a Reply

%d bloggers like this: