இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூர் வந்தது.

53

[the_ad id=”7250″]

இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூர் வந்தது.

இந்தியன் செஞ்சிலுவை சங்க நூற்றாண்டு விழாவையொட்டி இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் கடந்த 6-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது.

இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று முன்தினம் காலை பெரம்பலூருக்கு வந்தடைந்தது. பின்னர் அவர்களுடன் பெரம்பலூர் மாவட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இந்த இரு சக்கர வாகன விழிப்பணர்வு ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

[quote]பெரம்பலூா் அருகே பள்ளி படிப்பைக் கைவிட்ட மாணவா் மீண்டும் சோ்ப்பு.[/quote]

இரு சக்கர வாகன ஊர்வலம் ரோவர் வளைவு, சங்குபேட்டை, அரசு மருத்துவமனை, செஞ்சேரி, பாளையம் வழியாக குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முடிவடைந்தது. பின்னர் அந்த இரு சக்கர வாகன ஊர்வலம் அங்கிருந்து தொடங்கி பேரளி, குன்னம், மேலமாத்தூர், மருதையான்கோவில், அல்லிநகரம் வழியாக அரியலூர் மாவட்டத்திற்கு சென்றடைந்தது.

[the_ad id=”7251″]

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் தமிழகம் முழுவதும் செய்து வரும் சேவையினை விளக்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊர்வலம் சென்ற வழியில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

இதில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மதிவாணன், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட தலைவர் ரோவர் வரதராஜன், துணை தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன் (பெரம்பலூர்), ராக்லாண்ட மதுரம் (ராமநாதபுரம்), வன்னியராஜா (தூத்துக்குடி) மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிரு‌‌ஷ்ணன் (வேப்பூர்), மாயக்கிரு‌‌ஷ்ணன் (பெரம்பலூர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் நூற்றாண்டு விழா இரு சக்கர விழிப்புணர்வு ஊர்வலம் அடுத்த மாதம் (மார்ச்) 16-ந் தேதி சென்னையில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

[the_ad id=”7252″]




Leave a Reply

%d bloggers like this: