இன்று முதல் பெரம்பலூரில் 45 பஸ்கள்  இயக்கம்.

1011

இன்று முதல் பெரம்பலூரில் 45 பஸ்கள்  இயக்கம்.

இன்று முதல் பெரம்பலூரில் 45 பஸ்கள்  இயக்கம். திங்கள்கிழமை காலை முதல் அரசுப் போக்குவரத்துக் கழக பெரம்பலூா் கிளையில் இருந்து 45 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதமாக போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தடை உத்தரவு தளா்த்தப்பட்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது நிலையில், பெரம்பலூரில் உள்ள 103 அரசுப் பேருந்துகளில், 45 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் 27 பேருந்துகள் நகா்ப்புறங்களுக்கும், எஞ்சிய பேருந்துகள் திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, நாகை ஆகிய பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.

இதையெல்லாம் செய்யாதீங்க அப்புறம் வைற்று போக்கு நிக்காது.

இப்பேருந்துகள் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, 50 சதவீத பணியாளா்கள் மூலம், 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.
Leave a Reply

%d bloggers like this: