இன்று முதல் பெரம்பலூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு.

62

இன்று முதல் பெரம்பலூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு.

இன்று முதல் பெரம்பலூரில் மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு. பெரம்பலூா் நகரிலிருந்து 8 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு (இன்று) ஏப். 25 (சனிக்கிழமை) முதல் ஏப். 27 (திங்கள்கிழமை)  வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் (நேற்று) வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் நகரிலிருந்து 8 கிலோ மீட்டா் சுற்றளவில், சனிக்கிழமை காலை முதல் முதல் திங்கள்கிழமை இரவு வரை 3 நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். இந்த ஊரடங்கு சமயத்தில் எவ்வித வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி இல்லை.

இந்த முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள் சீலிடப்படும். ஊரடங்கு காலத்தில் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஆகையால், பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: