இணையத்தில் கள்ளச்சாராய விற்பனை இருவர் கைது.

246

இணையத்தில் கள்ளச்சாராய விற்பனை இருவர் கைது.


இணையத்தில் கள்ளச்சாராய விற்பனை இருவர் கைது. பெரம்பலூர் மாவட்டம்  மங்களமேடு கிராமத்தில் இணையம் (ஆன்லைன்) மூலமாகக் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இரண்டு நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

மங்களமேடு கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜா (த/பெ. ஆறுமுகம்) மற்றும்  செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் (த/பெ. சுப்பிரமணியன்) ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சி காரின் மூலமாக வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்குச் சென்று விநியோகித்துள்ளனர். இது சம்பந்தமாக ரகசிய தகவல் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இதனை அறிந்த மதுவிலக்கு காவல்துறையினர் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எசனை காட்டு மாரியம்மன் கோயிலின் அருகே வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் 6 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அந்தச் சாராயத்தை ஆத்தூரில் உள்ள  வாடிக்கையாளருக்குக் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளனர். வாகனத்துடன் அதிலிருந்த கள்ளச்சாராயத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வாகனத்திலிருந்த ரவிராஜா மற்றும் முத்துராஜ் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது: எங்களிடம் சாராயம் ஆர்டர் செய்து அதற்கான தொகையை கூகுள்பே மூலமாகத் தொகையைச் செலுத்திய பின்னர் வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று சாராயத்தைக் கொடுப்போம் என்பதாக தெரிவித்தனர்.

கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவரையும் பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.




Leave a Reply

%d bloggers like this: