ஆலத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்கள் பலி.

77

ஆலத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கிய இரண்டு மாணவர்கள் பலி.


பாடாலூர் அருகே செட்டிகுளம்-ஆலத்தூர் கேட் பிரிவு சாலையில் நேற்றிரவு நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் பலியாகினர்.

ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராமசாமி அவர்களின் 17வயது மகன் ஏழுமலை. இவர் பாடாலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா, அலுந்தழைப்பூரை சேர்ந்த மகாலிங்கம் அவர்களின் 15 வயது மகன் கீர்த்தி ராஜ். இதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தனது நண்பரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை செட்டிகுளம்-ஆலத்தூர் கேட் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்ததார். அந்நேரத்தில்  சாலையில் முன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆலத்தூரை சேர்ந்த ரெங்க நாதன் என்பவர் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரெங்கநாதன் சாலையோரத்தில் விழுந்தார். மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஏழுமலை மற்றும் அவரது நண்பரும் சாலையின் நடுவில் விழுந்தனர். அப்போது அவ்வழியாக ரப்பர் ஏற்றி வந்த லாரி ஏழுமலை, அவரது நண்பர் மீது ஏறி சென்றது. இதனால் சம்பவ இடத்திலேயே ஏழுமலை மற்றும் அவரது நண்பரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

[the_ad id=”7251″]

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல் துறையினர் காய மடைந்த ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாடாலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஒட்டுநரை விசாரித்து வருகின்றனர். இந்த கோர விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

[the_ad id=”7250″]

[the_ad id=”7251″]

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: