அரியலூரில் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட் விநியோகம், பெரம்பலூரில் 8-ந் தேதியாம்

204

அரியலூரில் 10-ம் வகுப்பு ஹால் டிக்கெட் விநியோகம், பெரம்பலூரில் 8-ந் தேதியாம்.

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி வழங்கப்படவுள்ளது.

10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜூன் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு ஜூன் 4-ந் தேதி ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோ, இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகிக்கப்படவில்லை.

ஆனால் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். வருகிற 8-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிகளுக்கு மாணவ- மாணவிகள் வரவழைக்கப்பட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், அன்றைய தினம் முக கவசம், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் மாணவ- மாணவிகளுக்கு ஹால் டிக்கெட்டை தலைமை ஆசிரியர்களால் வினியோகிக்கப்பட்டது.
Leave a Reply

%d bloggers like this: