வேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் 

வேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

87

வேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம். 

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Perambalur news: You can apply for rent of Government buildings in Vepur Union.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்தில் உள்ள, நன்னை ஊராட்சியில் 6,617 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டடங்கள், ஓலைப்பாடி ஊராட்சியில் 8,546 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டடங்கள், கீழப்புலியூா் ஊராட்சியில் 3,965 சதுர அடியில் அமைந்துள்ள 3 கட்டடங்கள், முருக்கன்குடி ஊராட்சியில் 5,907 சதுர அடியில் அமைந்துள்ள 2 கட்டடங்கள் என மொத்தம் 11 கட்டடங்கள் வாடகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூரில் கயிறு கட்டி ஆட்டோவை இழுத்து நூதன ஆர்ப்பாட்டம்.

மங்களமேடு அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி.

ஆயத்த ஆடைகள் தயாரித்தல் மற்றும் இதுதொடா்பான உப தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது. perambalur news

வேப்பூர் ஒன்றிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோா், இக்கட்டடங்களை வாடகைக்கு பெற ஜூலை 3- ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தையும், இணையதளம் மூலமாகவும் அறிந்துகொள்ளலாம்.

tags: perambalurGovernment
Leave a Reply

%d bloggers like this: