அங்கன்வாடி மையங்கள் மூலமாக கணக்கெடுப்பு பணி

அங்கன்வாடி மையங்கள் மூலமாக கணக்கெடுப்பு பணி.

276

அங்கன்வாடி மையங்கள் மூலமாக கணக்கெடுப்பு பணி.

perambalur news: Survey work through Anganwadi centers.

பெரம்பலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூலமாக கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தா தெரிவித்துள்ளதாவது:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக செயல்படும் அங்கன்வாடி மையங்களின் வாயிலாக கர்பிணிகள், பாலூட்டும் தாய் மார்கள், 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மறறும் பள்ளி செல்லாத வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு அளித்தல், முன்பருவ கல்வியுடன் மதிய உணவு திட்டம், எடை எடுத்து வளர்ச்சி கண்காணித்தல், நல கல்வி அளித்தல், தடுப்பூசி வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படடு வருகிறது.

பெரம்பலூாில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுருத்தி ஆர்ப்பாட்டம்.

இந்த திட்டங்களில் பயன்பெற பொது மக்கள் தங்கள் குடும்ப விபரங்களை அங்கன்வாடி பணியாளர்களிடம் அளிப்பதன் மூலம், பயனாளி குறித்த விபரங்கள் அங்கன்வாடி மைய பணியாளர்கள் பயன்படுத்தும் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். விடுபட்ட சிறிய கிராமங்கள், நகர்புறத்தில் உள்ள பல்வேறு குடும்பங்கள் இன்னும் சேர்க்கப்பட வேண்டியுள்ளது.

இது குறித்து கணக்கெடுக்க வரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

tag: perambalur news, perambalur district news,

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: