பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி. Perambalur News

பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.

833

பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி இருவர் பலி.


Perambalur News: Two death in poison gas attack near Perambalur.


பெரம்பலூர் அருகே விசவாயு தாக்கி தீயணைப்புவீரர் உட்பட இருவர் பலி.

பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம் பாளையம் கிராமத்தில் வடிவேல் மகன் முருகேசன் என்பவரது வயற்காட்டில் கிணறு வெட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் நீர்வரத்து அதிகரிப்பதற்காகக் கடந்த 9-ம் தேதி சைடு போர் போட்டு வெடி வைக்கப்பட்டது. perambalur news today

நேற்று மாலை 4 மணியளவில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 27) என்பவர் சைடு போரில் தண்ணீர் வருகிறதான எனப் பார்ப்பதற்காகக் கிணற்றுக்குள் இறங்கினார். அதன் பின்னர் அவர் மேல வரவில்லை. இதையடுத்து அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாஸ்கர் (வயது 26) என்பவர் ராதா கிருஷ்ணனை மீட்பதற்காகக் கிணற்றுக்கு இறங்கினார் ஆனால் அவரும் மேலே வரவில்லை. perambalur today news

Perambalur News:

இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவரதணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அத்துறையைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 37), தனபால் பால்ராஜ் ஆகியோர் கிணற்றுக்குள் இறங்கித் தேடியபோது மயங்கிக் கிடந்த பாஸ்கரை மீட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விசவாயு கிணற்றிலிருந்து வெளியானது. இதில் தீயணைப்பு படைவீரர்களான தனபால், பால்ராஜ் ஆகியோர் மயங்கினர். அவர்களைக் கிணற்றுக்கு மேலே இருந்து வீரர்கள் கயிறு காட்டி தூக்கி மீட்டனர். இதனிடையே கிணற்றை எட்டிப்பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் முருகேசன் (வயது 27) என்பவர் மயங்கி விழுந்தார். perambalur district news

பின்னர் மீட்கப்பட்ட தீயணைப்பு வீரர் ராஜ்குமார் உட்பட 4 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் இறந்தார். மேல் சிகிச்சைக்காக பாஸ்கரைத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயணைப்பு படை வீரர்கள் தனபால், பால்ராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். tamil news

ராதாகிருஷ்ணன் உடலைப் பெரம்பலூர் மற்றும் துறையூர் தீயணைப்ப நிலையங்களின் படைவீரர்கள் 6 மணிநேரம் தேடி மீட்டனர். தகவலறிந்த தீயணைப்பு படை டிஐஜி மீனாட்சி விஜயகுமார், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர்.

விசவாயு தாக்கி இறந்த தீயணைப்பு படை வீரர் ராஜ்குமார் தேனி மாவட்டம், அம்மாபட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
%d bloggers like this: