Penalty

அமீரகம்: வாகனத்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல் வாகனத்தை நிறுத்தி சென்றால் அபராதம்.

471

வாகனத்தின் என்ஜினை ஆஃப் செய்யாமல் வாகனத்தை நிறுத்தி சென்றால் அபராதம். Penalty, if without turning off the engine of the vehicle.

அபுதாபியில் ஷாப்பிங் செல்லும்போதோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வெளியேறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமாக 500 திர்ஹம் விதிக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

ஷாப்பிங் மால்கள், பெட்ரோல் நிலையங்கள் அல்லது ATM களில் தங்கள் வாகன என்ஜின்களை ஆஃப் செய்யாமல் வாகனத்தை விட்டு வாகன ஓட்டிகள் வெளியேறுவதால் அடிக்கடி வாகனத் திருட்டுக்கு வழிவகுப்பதாக அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு காணொளி ஒன்றையும் அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு வெளியேறும் பொழுது குறிப்பாக அவர்கள் குழந்தைகள் வாகனங்களுக்குள் இருக்கும்போது வாகன எஞ்சின்களை ஆஃப் செய்யாமல் செல்லக்கூடாது என்று போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் வலியுறுத்தியுள்ளது.

our facebook page

Keywords: Penalty, gulf news, gulf news in tamil, Dubai news, dubai news in tamil, gcc news, gcc news in tamil




%d bloggers like this: