Penalty for overstaying on Visit Visa
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டிராவல் ஏஜென்சிகள் பெரிய அபராதங்களையும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். ஏனெனில் சிலர் தங்கள் விசிட் விசாக்களில் கொடுக்கப்பட்ட நாட்களை கடந்து அமீரகத்தில் தங்கி கொள்கின்றனர். இதன் காரணமாக டிராவல்ஸ் ஏஜென்ஸியினர் அபராதம் செலுத்தும் சூழலுக்கு உள்ளாவதுடன்பிற சிக்கல்களையும் சந்திக்க நேரிடுவதாக தெரிவிக்கின்றனர்.
விசிட் விசாவில் உள்ளவர்கள் விசா அனுமதித்த நாட்களை விட நீண்ட நாட்கள் தங்குவது அல்லது காணாமல் போவது போன்ற பிரச்சனைகளால் டிராவல்ஸ் ஏஜென்ஸியினருக்கு சிக்கல்கள் உண்டாகிறது.
அதே நேரத்தில் விசிட் விசாவிலுள்ள சிலர் எதிர்பாராத பணப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாலோ அல்லது துபாயினை அதிகமாக அனுபவிக்க விரும்புவதால் அதிக நாட்கள் தங்கிவிடுகிறார்கள். ஒரு சிலர் சட்டத்தை மீறுவதை உணராமல் வேலை தேடிக்கொண்டு நீண்ட காலம் தங்கியுள்ளனர்.
இதுபற்றி விசிட் விசாவில் இருந்த ஒருவர் கூறிய போது துபாய்க்கு வந்த அவர் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர் தனது விசா காலாவதி தேதியை மறந்துவிட்டு 8 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சுமார் 1,000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டியிருந்ததாக தெரிவித்தார்.
விசிட்டில் உள்ளவர்கள் அதிக நாட்கள் தங்கும் போது டிராவல் ஏஜென்சிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அவர்கள் ஒவ்வொரு விசாவிற்கு 2,500 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படுகிறது. தலைமறைவான விசிட் விசாவினர் 2,000 திர்ஹம் முதல் அபராதத்தை எதிர்கொள்கின்றனர். இது கூடுதல் கட்டணத்துடன் 5,000 திர்ஹம் வரை செல்லலாம்.
இந்தச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு விசா விதிகளைப் பின்பற்றுமாறு டிராவல் ஏஜென்ஸியினர் விசிட் விசாவில் உள்ளவர்களை கேட்டுக்கொள்கிறார்கள். சட்ட மற்றும் நிதி சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு முறையான திட்டமிடல் மற்றும் விசா விதிமுறைகளை மதிப்பது முக்கியமாகும்.
Keyword: Penalty for overstaying
இதையும் வாசிக்கலாம்:
ஜுன் 1 முதல் யூஸ் அன் த்ரோ பைகளுக்கு தடை
கருப்பு கவுனி அரிசியின் மகத்துவமிக்க பலன்கள்