ஓடவும் முடியாது

அமீரகம்: ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ட்ரோன்கள் மூலம் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்.

583

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ட்ரோன்கள் மூலம் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம். Penalties for not wearing face shields by drones

ஐக்கிய அரபு அமீரகத்தில், தற்பொழுது ட்ரோன்களின் மூலம் கொரோனா விதிமீறல் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்துள்ளது துபாய் போலீஸ்.

துபாயில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் நைஃப் முக்கிய பகுதியாகும். இந்த நைஃப் பகுதியில் ட்ரோன்கள் மூலம் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த சுமார் 518 நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு துபாய் போலீஸ் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து நைஃப் காவல் நிலைய இயக்குநர் கூறுகையில், பல்வேறு வகையான கொரோனா விதி மீறல்களைக் கண்டறிய ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் இப்பகுதியில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ட்ரோன்கள் சமீபத்திய முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைக் (latest face recognition technology) கொண்டுள்ளன, மேலும் இதன் மூலம் குறுகிய வீதிகளிலும் சந்துகளிலும் காட்சிகளை பதிவுசெய்ய முடியும். இதன் மூலமாக முக கவசங்கள் அணியாத 518 பேரை ட்ரோன்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என கூறினார்.

Penalties for not wearing face shields by drones

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களைப் கண்டு பிடிப்பதைத் தவிர, மற்ற குற்றங்களைக் கண்டறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தெருக்களில் சட்டவிரோதப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை ட்ரோன்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர் என்றும், இந்த புதிய முயற்சியானது குற்றங்களைத் தடுக்க பெரிதும் உதவிகரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அறிவிப்பது என்ன வென்றால் துபாயில் முறையாக முக கவசம் போடாமல் வெளியில் இறங்கினால் ட்ரோன்கள் மூலம் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதாவது ஓடவோ ஒளியவோ முடியாது உங்களை ட்ரோன்கள் கண்காணிக்கிறது கவனமாக இருந்தால் உங்களுக்கு நல்லது.

Our Facebook Page

Keywords: dubai news, uae news, gulf news, gcc news, Penalties,
%d bloggers like this: