பயணிகள் விமானம் ரன்வேயில் இருந்து ஆற்றில் விழுந்தது!

பயணிகள் விமானம் ரன்வேயில் இருந்து ஆற்றில் விழுந்தது!


அமெரிக்காவில் 136 பயணிகளை ஏற்றிக் கொண்டு பறந்த போயிங் 737 பயணிகள் விமானம், ஃப்ளோரிடா மாகாணத்துக்கு அருகேயிருந்த செயின்ட் ஜான் நதியில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. விமான ஓடுபாதையின் இறுதியில் இருந்த நதியில்தான், விமானம் நிலைதடுமாறி விழுந்துள்ளது.

இது அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம், ஜாக்சன்வில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து ஜாக்சன்வில் மேயர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் சொல்லும் போது, ‘விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,  விமானத்தின் எரிபொருள் நீரில் கலப்பதைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
Leave a Reply

%d bloggers like this: