Death of a teenager

மர்மமான முறையில் ஊராட்சி பணியாளர் மரணம்

518

மர்மமான முறையில் ஊராட்சி பணியாளர் மரணம். panchayat worker death

மர்மமான முறையில் ஊராட்சி பணியாளர் இறந்து கிடந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). வெங்கலம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் நேற்று அதே ஊரில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறை அருகே மர்மமான முறையில் செல்வராஜ் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: panchayat worker death, Perambalur News, Perambalur District News




%d bloggers like this: