ADVERTISEMENT
Paid parking at The Dubai Mall from July 1

துபாய் மாலில் ஜூலை 1 முதல் கட்டண பார்க்கிங்

Paid parking at The Dubai Mall from July 1

துபாய் மாலில் ஜூலை 1 முதல் கட்டண பார்க்கிங் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் இரண்டாவது பெரிய வணிக வளாகமான துபாய் மால், டோல் ஆப்பரேட்டர் சாலிக் நிறுவனத்துடன் இணைந்து, ஜூலை 1 முதல் கட்டண பார்க்கிங் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. துபாய் மால் வெளியிட்ட அறிவிப்பு படி, இந்த புதிய கட்டண பார்க்கிங் அமைப்பு கிராண்ட் பார்க்கிங், சினிமா பார்க்கிங், மற்றும் ஃபேஷன் பார்க்கிங் பகுதிகளுக்கு பொருந்தும். அதே நேரத்தில், ஜபீல் மற்றும் பவுன்டைன் வியூஸ் பார்க்கிங் இடங்கள் இலவசமாக இருக்கும்.

வார நாட்களில், வாகன ஓட்டிகள் முதல் நான்கு மணி நேரம் இலவசமாக பார்க்கிங் பயன்படுத்த முடியும். அதன்பின், வாகனம் நிறுத்துவதற்காக 20 திர்ஹம்ஸ் முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை கட்டணம் வசூலிக்கப்படும். வாரஇறுதி நாட்களில், முதல் ஆறு மணிநேரம் இலவசமாகவும் அதன் பின் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்துக்கும் கட்டணம் விதிக்கப்படும்.

வார நாட்களில்:

ADVERTISEMENT
  • முதல் 4 மணி நேரம்: இலவசம்
  • அதன் பின்: 20 திர்ஹம்ஸ் முதல் 1,000 திர்ஹம்ஸ் வரை

வார இறுதிகளில்:

  • முதல் 6 மணி நேரம்: இலவசம்
  • அதன் பின்: ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கும் கட்டணம்

2023 டிசம்பரில், தடுப்பு இல்லாத அமைப்புடன் (barrier-free system) சாலிக்கின் ஒத்துழைப்புடன் துபாய் மாலில் கட்டண பார்க்கிங் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மாலில் 13,000க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள் உள்ளன. மாலுக்கு செல்லும் நபர்களுக்கு தடையற்ற மற்றும் திறமையான பார்க்கிங் மேலாண்மை அமைப்பை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணம், கார்களில் உள்ள நம்பர் ப்ளேட்டை தானியங்கி முறையில் கண்டறிந்து வசூலிக்கப்படும். பார்கிங் தளத்திற்குள் நுழையும் போது ஒரு கேமரா காரின் பிளேட் எண்ணைப் படம்பிடித்து, நுழைவு நேரத்தைப் பதிவு செய்யும். வெளியேறும் சமயத்தில் ​​மீண்டும் பிளேட் எண்ணை கேமரா ஸ்கேன் செய்யும், மொத்த பார்க்கிங் நேரத்தை கணக்கிடும்.

வளைகுடா செய்திகளை தெரிந்து கொள்ள நமது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள்.

Keywords: Paid parking, today tamil news, gulf news tamil, tamil gulf news, dubai news tamil, gcc tamil news

ADVERTISEMENT

Our Facebook Page

ALSO READ:
விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருவபவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனை!
துபாய்: இந்த ஆண்டில் இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 4 பேர் பலி
ஹஜ்ஜின் போது கடும் வெப்பத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் மரணம்.
பரபரப்புடன் காணப்படும் துபாய் விமான நிலையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *