கோடை ஆரம்பித்ததை தொடர்ந்து ஊட்டி மலை ரயில் சேவை துவக்கம்! Ooty hill train service starts
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான மலைகளின் அரசியான ஊட்டியில் மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட குளிர்ச்சியான பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது அதிகரிக்கும். குறிப்பாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊட்டி – மேட்டுபாளையம் மலை ரயிலில் பயணிக்க பெரிதும் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் ஊட்டி மலை ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி முதல் இந்த ஊட்டி மேட்டுபாளையம் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில் இந்த ரயிலில் பயணிக்க முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்வது அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
keywords: Ooty hill train, Ooty train, Train, today tamil news
You must log in to post a comment.