ADVERTISEMENT
Online check-in to avoid crowding

UAE : கூட்ட நெரிசலை தடுக்க ஆன்லைன் செக்-இன்.!

UAE : Online check-in to avoid crowding

ஒவ்வொரு ஆண்டின் கோடை விடுமுறையின் போது அமீரக விமான நிலையங்களில் விடுமுறைக்காகப் புறப்படும் போது பயணிகள் நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருக்கிறது. இந்த அதிகபட்ச பயண நேரங்களை சுமார் 25% குறைக்கலாம் என எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறினார். பெரும்பாலான மாற்று செக்-இன் முறைகள் தற்போது இலவசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

துபாய் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் சேவைகள் துணைத் தலைவர் மர்யம் அல் தமிமி, “பயணிகள் ஆன்லைனில் செக்-இன் செய்தால், விமான நிலையத்தில் சுய சேவை பேக்கேஜ் டிராப் கியோஸ்க்(baggage drop kiosks) களில் அவர்கள் வேகமாக தங்கள் வேலைகளை முடிக்க முடியும்” என்று கூறினார்.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) 2.6 மில்லியன் பயணிகள் இந்த கோடை விடுமுறைக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறது. விமான நிலையத்தில் மிகவும் பரபரப்பான நாள் ஜூலை 6 சனிக்கிழமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“பயண நேரத்தில், காத்திருப்பு நேரம் சராசரியாக 20 நிமிடமாக இருக்கும். ஆனால் பயணிகள் 15 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க வைக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஆன்லைனில் அல்லது அப்ளிக்கேஷனில் செக்-இன் செய்வது மிகவும் எளிது. பின்னர் சுய சேவை பேக்கேஜ் கியோஸ்க்களில் டிராப் செய்யலாம்,” என்றார் அல் தமிமி.

ADVERTISEMENT

நீண்ட வரிசைகளில் நிற்பதைத் தவிர்க்க 4 வழிகள்

ஆன்லைன் அல்லது ஆப் செக்-இன்: பயணிகளிடையே மிகவும் பிரபலமான முறை, சுமார் 50% பேர் இதைப் பயன்படுத்துகின்றனர். இது விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு திறக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் முன்பே லக்கேஜ் (Luggage) டிராப்: பயணிகள் முன்பே இலவசமாக விமான நிலையத்தில் தங்கள் லக்கேஜ்-ஐ ஒப்படைக்கலாம். இது புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அல்லது அமெரிக்கா செல்லும் விமானங்களுக்குப் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு செய்யலாம்.

சிட்டி செக்-இன் வசதிகள்: துபாய் சர்வதேச நிதி மையத்தில் அதாவது Dubai International Financial Centre (DIFC)ல் செக்-இன் வசதி உள்ளது. பயணிகள் விமான புறப்பாடு நேரத்திற்கு முன் 24 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை லக்கேஜ்-ஐ ஒப்படைக்கலாம். அதே போல அஜ்மான் மத்திய பேருந்து நிலையத்தில் 24 மணி நேர செக்-இன் வசதியும் உள்ளது.

வீட்டில் செக்-இன்: முகவர்கள் பயணிகளின் வீடு, ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் செக்-இன் செய்து லக்கேஜ்-ஐ விமானத்தில் எடுத்துச் செல்கின்றனர். இந்த வகையில் செக்-இன் செய்வதன் மூலம் பயணிகள் ஹேண்ட் லக்கேஜ் உடன் வரலாம். இந்த சேவை முதல் வகுப்பு பயணிகள் மற்றும் பிளாட்டினம் ஸ்கைவேர்ட்ஸ் உறுப்பினர்களுக்கு இலவசமாக உள்ளது.

ADVERTISEMENT

“எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் செக்-இன் அனைத்து பயணிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவரும் பயன்படுத்தலாம். ஆனால் அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு இது பொருந்தாது. அந்நாட்டின் விதிமுறையின் படி பயணிகள் தங்கள் ஆவணங்களை நேரடியாக விமான நிலைய செக்-இன் பகுதிகளில் சமர்ப்பிக்க வேண்டும்,” என்றார் அல் தமிமி.

Keywords: Online check-in, UAE Tamil News, Gulf Tamil News, GCC Tamil News, Dubai Tamil News,

Our Facebook Page

ALSO READ:
மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு
ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.
குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்.!
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *