பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒருவர் பலி.
One dies of corona infection
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 38 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 246 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 781 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 4,710 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது 1,740 கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,440 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
தினத்தந்தி
Keywords: One dies of corona, COVID-19
You must log in to post a comment.