எண்ணெய் வடியுற முகமா உங்களுக்கு? Do you have an oily face?

473

எண்ணெய் வடியுற முகமா உங்களுக்கு? அப்போ இது உங்களுக்குதான்!


Beauty Tips: Do you have an oily face?


நமது முகத்தில் முகப்பரு வருவதற்கான காரணமே சருமம் எண்ணெய்ப்பசையாக இருப்பதுதான். எண்ணெய் சருமம் இருந்தால் முகப்பரு வரும் என்றாலும் வறண்ட சருமமாக இருந்தால் விரைவில் சுருக்கம் வரக்கூடும். அதனால் இது பரவாயில்லை என்று சொல்லலாம். என்ன கூடுதலாக பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் எண்ணெய் சருமமானது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. சரி உங்கள் சருமம் எண்ணெய்ப்பசையாக இருந்தால் என்ன செய்யலாம் தெரிந்துகொள்வோம்.

Do you have an oily face?

எண்ணெய் சருமம் (Oily skin)

எண்ணெய் சருமம் என்பது சருமத்தின் மேல்புற அடுக்கு அதிகப்படியாக எண்ணெயை கொண்டிருப்பதால் உண்டாகும் விளைவு. இது சருமத்தில் அதிகப்படியாக உற்பத்தியாகும் போது உண்டாகிறது கொழுப்பு நிறைந்தவை என்பதால் சருமம் வறட்சியாகாமல் ஈரப்பதத்தை தக்கவைக்க செய்கிறது.

எனினும் இவை அதிகரிக்கும் போது சருமத்துளைகள் அடைக்கப்படுகிறது. இதனால் முகப்பருக்கள், பிளாக்ஹெட்ஸ் போன்றவை உண்டாகிறது. இந்த பளபளப்பான தன்மை முகத்தில் அதிகரிக்கும் போது எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.

எண்ணெய் வடியுதா

தினமும் குளித்த பிறகு அல்லது முகம் கழுவிய பிறகும் முகத்தில் அதீத பளபளப்பு இருந்தால், உங்கள் சரும நிறம் மாறவிலையென்றால் அது எண்ணெய்ப்பசை சருமம் தான். உங்கள் சருமத்துக்கேற்ற க்ரீம் வாகிகளை கண்டறிந்து அதை கொண்டு சருமத்தை சுத்தம் செய்யவும் பழக்க வேண்டும்.

குறிப்பாக பென்சாயில் பெராக்ஸைடு, தேயிலை மர எண்ணெய், சாலிசிலிக் அமிலம் , ஆயுர்வேதமாக இருந்தால் வேம்பு போன்றவை எண்ணெய்ப்பசை சருமத்துக்கு பெரிதும் உதவக்கூடும்.

face beauty tips in tamil

புளோட்டிங் ஷீட்

முகத்தை கழுவி கொண்டே இருந்தால் எண்ணெய்ப்பசை போகும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அடிக்கடி முகத்தை கழுவுவதால் எண்ணெய் பசை அதிகரிக்குமே தவிர குறையாது. அதனால் எப்போதும் கையில் புளோட்டிங் ஷீட் வைத்திருங்கள். இது அழகு பொருள் கிடைக்கும் எல்லா இடங்களிலும் கிடைக்கும்.

காகிதம் போன்று இருக்கும் இதை முகத்தில் துடைத்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய்பப்சையை உறிஞ்சு எடுக்கும். இதை வெளியில் செல்லும் போது கையில் வைத்திருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

மாய்சுரைசர்

எண்ணெய்பசைக்கு மாய்சுரைசர் பயன்படுத்தகூடாது என்றூ பலரும் தவிர்க்கிறார்கள். இதனால் சருமம் முதலில் எண்ணெய்ப்பசை இல்லாமல் வறட்சியை சந்திக்கும். படிப்படியாக அதிக எண்ணெய்ப்பசையை உற்பத்தி செய்யும். அதனால் மாய்சுரைசரை தவிர்க்காம்ல் பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்துக்கேற்ற மாய்சுரைசரை சரும நிபுணரின் ஆலோச்னையோடு தேர்வு செய்யுங்கள். கற்றாழை, கிளிசரின் சேர்த்த பொருள்களை சேர்க்கலாம். எண்ணெய்பசை கொண்டவர்கள் கோக்கோ எண்ணெய், தேங்காயெண்ணெய் சேர்க்கப்பட்ட க்ரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.

beauty tips in tamil

மேக்-அப் தவிர்க்க வேண்டும்

அதிகமாக மேக்- அப் பயன்படுத்துவதன் மூலம் எண்ணெய்ப்பசை வெளிப்படையாக தெரியும். மேக் அப் செய்யும் போது எண்ணெய்ப்பசை ஏற்காத க்ரீம்களை தேர்ந்தெடுக்கவும். அதிக மேக் அப் பயன்படுத்த வேண்டாம். அதே போன்று தினமும் மேக்-அப் கலைப்பதையும் உறுதி செய்யுங்கள்.

பராமரிப்புக்கு பயன்படுத்தும் பொருள்கள் இயன்றவரை வீட்டிலிருக்கும் தேன், ஓட்ஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை பயன்படுத்தலாம். எண்ணெய்ப்பசைக்கு அதிகமாக ஸ்க்ரப் செய்ய கூடாது. அதே நேரம் உணவிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி – சமயம்

எங்களுடைய பேஸ்புக் பக்கம்
%d bloggers like this: