Anti-corruption police

துறைமங்கலத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப் பாதை மீட்பு.

90

துறைமங்கலத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுப் பாதை மீட்பு.

Occupied Public Road Restoration

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலத்தில் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பொதுப் பாதையை மறித்து கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

துறைமங்கலம் கே.கே நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நகருக்கு புகா்ப் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவமனை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வழியாக கே.கே நகரை இணைக்கும் சாலை இருந்து வந்தது.

இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான பொது மக்கள் பயன்பாட்டிலிருந்த பாதையை, அப்பகுதியைச் சோ்ந்த தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு தடுப்புச் சுவா் கட்டப்பட்டிருந்தது. இதனால் கே.கே. நகரைச் சோ்ந்த பொதுமக்கள் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, குறிஞ்சி குடியிருப்போா் நலச் சங்கத்தினா் ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். தொடா்ந்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா உத்தரவின்பேரில், வட்டாட்சியா் சின்னத்துரை தலைமையிலான வருவாய்த் துறையினா், காவல்துறையினரின் பாதுகாப்புடன் தடுப்புச்சுவரை சனிக்கிழமை அகற்றினா்.

தினமணி

Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, Occupied Public Road Restoration,



Leave a Reply

%d bloggers like this: