கீரையிலுள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க…
Nutrients in spinach
கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி’ போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `ஏ’ ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
கீரைகளிலுள்ள கரோட்டின் சத்துப்பொருள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்க கீரைகளை நீண்ட நேரம் வேக வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கேரட்டின் சிதைந்து விடுகிறது.
கீரைகள் ‘பி காம்ப்ளக்ஸ்’ வைட்டமின்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் அளவு பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம். சிறுவர்களுக்கு 50 கிராம் அளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும்.
Keywords: Nutrients in spinach
You must log in to post a comment.