நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வைரஸ் மலையாள திரைப்பட ட்ரைலர்!

நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வைரஸ் மலையாள திரைப்பட ட்ரைலர்!


வைரஸ் திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் வலம் வந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

மருத்துவ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள மலையாள திரைப்படமான “வைரஸ்” படத்தை இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஞ்சாக்க போபன், ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இந்திரஜித் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கல்லிங்கல், ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ரேவதி, ரம்யா நம்பீசன், பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை சுஷின் ஷ்யாம், ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்னர்.

வைரஸ் திரைப்படம் 2018 ம் ஆண்டில் கேரளாவை உலுக்கியெடுத்த   நிபா வைரஸ் (Nipah)  தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. முஹ்சின் பரிரி, ஷார்பூ மற்றும் சுஹாஸ் ஆகியோர் இப்படத்தின் கதையை வடிவமைத்துள்ளனர் . படத்தை ஆஷிக் அபுவின் மனைவியும் நடிகையுமான  ரீமா கல்லிங்கல் தயாரிக்கிறார்.

வருகிற ஜூன்  7-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு யுடியூபில்  ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

159total visits,4visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: