Dubai: Now you can renew driving license through mobile.
துபாயில் உள்ள சில ஓட்டுநர்கள் தங்கள் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவுகளை தங்கள் மொபைல் போன்களின் மூலம் புதுப்பிக்கலாம்.
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு முக்கிய தகவல் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள டிரைவர்கள் தங்கள் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவுகளை தங்கள் மொபைல் போன்களின் மூலம் புதுப்பிக்கலாம் என்று RTA தெரிவித்துள்ளது. ஓட்டுநர்கள் தங்கள் டிரைவிங் லைசென்ஸை உடன் எடுத்து செல்ல தேவையில்லை. தங்கள் மொபைலிலேயே லைசென்ஸ் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
சாம்சங் மொபைல் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வாகனப் பதிவு மற்றும் ஓட்டுநர் லைசன்ஸ் தகவலை RTA செயலி மூலம் நேரடியாக தங்கள் Samsung Wallet இல் சேர்க்கலாம். துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சாம்சங் கல்ஃப் எலக்ட்ரானிக்ஸ் உடன் கூட்டாண்மை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இந்த சேவையானது துபாயில் சாம்சங் மொபைல் வைத்திருப்பவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சாம்சங் வாலட்டில் உங்கள் உரிமம், வாகன பதிவை எவ்வாறு சேர்ப்பது?
இது பற்றி RTA வின் ஸ்மார்ட் சர்வீசஸ் இயக்குனரான மீரா அல் ஷேக் கூறுகையில், “அனைத்து தரவுகளும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையின் மிக உயர்ந்த தரத்துடன் பராமரிக்கப்படுகின்றன, பயனர் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் RTA மற்றும் சாம்சங் ஆகிய இரண்டும் மிகவும் கவணமாக இருக்கின்றது” என்று உறுதியளித்துள்ளார்.
பயன்படுத்தும் முறை
- RTA செயலியை பதிவிறக்கி நிறுவுங்கள்: உங்கள் சாம்சங் மொபைல் போனில் RTA செயலியை பதிவிறக்கவும்.
- செயலியில் உள்நுழைக: உங்கள் RTA கணக்கில் உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.
- உங்கள் விவரங்களை இணைக்கவும்: டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவு விவரங்களை உள்ளிடவும்.
- Samsung Wallet இல் சேமிக்கவும்: RTA செயலியில் உள்ள “Add to Samsung Wallet” என்ற விருப்பத்தைத் தெரிவுசெய்க.
- உங்கள் மொபைலில் கையாளவும்: சேமித்த பிறகு, உங்கள் Samsung Wallet இல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனப் பதிவுகளை எளிதாக அணுகலாம்.
கடந்த ஆண்டு அக்டோபரில், துபாய் மெட்ரோ அல்லது துபாயில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் சாம்சங் பயனர்களுக்கு டிஜிட்டல் nolpay அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் போக்குவரத்திற்கான கட்டணம் செலுத்த அவர்கள் தங்கள் ஸ்மார்ட் போன் அல்லது ஸ்மார்ட்வாட்சை பயன்படுத்தலாம். அதேபோல், சில்லறை விற்பனை கடைகள், மளிகை பொருட்கள், பொது பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் டிஜிட்டல் நோல் கார்டைப் பயன்படுத்தலாம்.
Keywords: you can renew driving license, Gulf tamil news, GCC Tamil news, Arab tamil news
அமீரக செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
துபாய் டிசர்ட் சபாரி பற்றி தெரியுமா?
துபாயிலிருந்து ஹட்டாவுக்கு பஸ்சில் பயணம்
UAE: வெள்ளிக்கிழமை தொழுகை சிறப்புப் பிரசங்க நேரம் குறைப்பு