பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை

பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

412

பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

Perambalur News; No one in Perambalur is affected by corona infection.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று தா.பழூர், ஜெயங்கொண்டம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கு என மொத்தம் 2 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,562 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 91 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 4, 423 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 150 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

290 பேருக்கு பரிசோதனை.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று யாரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே மாவட்டத்தில் 2,238 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 2,212 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், 5 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 290 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
%d bloggers like this: