இரவு தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்.
Night’s sleep is essential for health.
நல்ல இரவு தூக்கம் நமது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் மிக அவசியமானதாக இருக்கிறது. சிறந்த தூக்கத்தை அடைய உதவும் சில குறிப்புகள் இங்கே.
தினமும் சரியான நேரத்தில் தூங்க பழக வேண்டும்: Sleep at the right time:
தினமும் ஒரே நேரத்தில் உறங்கும் பழக்கத்தை முதலில் கொண்டு வரவேண்டும். அதாவது இரவு 10 மணிக்கு படுக்க செல்வதென்றால் அதையே தினமும் கடைபிடிக்க வேண்டும். விடுமுறை நாள்தானே என்று வார இறுதி நாட்களில் கூட நேரந்தாழ்த்தி படுக்கைக்கு செல்லக்கூடாது. இதனால் நம் உடலின் உறுப்புகளும் நேரத்திற்கு உறங்குவதற்கு தயார் படுத்தி கொள்ளும்.
தூக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குங்கள்: Create an environment conducive to sleep
- உங்கள் படுக்கையறை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் இருக்கும்படி அமைத்து கொள்ளுங்கள்.
- தேவையற்ற ஒளியைத் தடுக்க திரைச்சீலைகள் பயன்படுத்துங்கள் மேலும் இடையூறு விளைவிக்கும் சத்தங்கள் வராதபடி பார்த்துகொள்ள வேண்டும்.
- வசதியான படுக்கை மற்றும் தலையணைகள் ஆகியவை சிறந்த தூக்க சூழலுக்கு பங்களிக்கும்.
படுக்கைக்கு முன் இவற்றைத் தவிர்க்கவும்: Avoid these before bed
- உடற்பயிற்சி செய்வது,
- எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்றவை) அல்லது படுக்கைக்கு முன் தீவிரமான டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தூக்கம் வருவது கடினமானதாக இருக்கும்.
படுக்கைக்கு முன் இவற்றை செய்யவும்: Do these before bed
- புத்தகம் படிப்பது, வெதுவெதுப்பான குளியல் எடுப்பது அல்லது ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் போன்ற தளர்வு நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற நிதானமான செயல்களில் ஈடுபட முயற்சிக்கவும். இதனால் தூக்கம் எளிதாக வந்தடையும்.
காஃபின் மற்றும் நிகோடின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்: Limit caffeine and nicotine intake:
- காஃபின் மற்றும் நிகோடின் ஆகிய இரண்டும் உங்கள் தூக்கத்தை கெடுக்க கூடியவைகளாகும். உறங்க செல்வதற்கு முன்பாக இவ்விரண்டையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை தூங்குவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் தூக்கத்தின் தரத்தை குறைக்கும்.
படுக்கைக்கு முன் அதிக உணவு மற்றும் அதிகப்படியான திரவங்களை தவிர்க்கவும்: Avoid eating and drinking too much before bed.
- படுக்கைக்கு செல்லும் முன்பு அதிகமான உணவு உட்கொள்வது. அதே போல அதிகமான தண்ணீர் குடிப்பது இரவு தூக்கத்தில் அசௌகரியத்தியத்தை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இரவுநேர கழிவரை செல்வதை தடுக்க சில மணிநேரங்களுக்கு முன்பாக சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
பகலில் தூங்குவதை தவிர்க்கவும்: Avoid sleeping during the day
- நீங்கள் பகல்நேரத்தில் தூங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள். அப்படியே தூங்குவதாக இருந்தாலும் குறுகிய நேரத்திற்கு (சுமார் 20-30 நிமிடங்கள்) மட்டும் தூங்கவும்.
தேவைப்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்: Seek medical help for sleep.
- நீங்கள் தொடர்ந்து தூக்கம் வராமல் போராடினால் அல்லது தூக்கக் கோளாறுக்கான அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம். அவர்கள் உங்கள் பிரச்சனை ஆராய்ந்து வழிகாட்டுதலை வழங்கலாம் மற்றும் பொருத்தமான சிகிச்சைகள் அல்லது மருந்துகள் பரிந்துரைப்பார்கள்.
ஒவ்வொருவரின் உறக்கத் தேவைகளும் வேறுபட்டவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். எனவே உங்களுக்கு எவ்வளவு நேரம் தூங்குவது சிறந்தது என்பதை தெரிந்து அதற்கேற்றார் போல் உறங்குங்கள்.
ஆரோக்கியமான தூக்கத்தை தூங்குவதன் மூலம் மறுநாள் காலை மனதும், உடலும் புத்துணர்ச்சியுடனும் எழுந்திருக்க உதவும். முயற்சி செய்து வெற்றியடையுங்கள்.
Keywords: Night’s Sleep, Night’s sleep essential for health, Benefits of sleep, Health Tips