ADVERTISEMENT
Next long Holiday in Emairates

Next long holiday – அமீரகத்தில் அடுத்த நீண்ட விடுமுறை எப்போது?

Next long holiday in Emirates: Possible dates announced!

இஸ்லாமிய காலண்டர் அடிப்படையில், ஈத் அல் பித்ருக்குப் பிறகு ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஈத் அல் அதஹா என்னும் பக்ரீத் பண்டிகை வரும். இதனை இஸ்லாமியர்கள் தியாக திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். வரும் ஈத் அல் அதஹா நாட்களில் அதிகமான விடுமுறை நாட்கள் வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

சிறப்பு மிக்க ரமழான் மாதத்தில் குறைக்கப்பட்ட வேலை நேரங்களுக்குப் பிறகும், ஈத் அல் பித்ர் விடுமுறையும் முடிந்துவிட்டது. இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. அமீரகத்தில் உள்ள அனைவரும் வழக்கமான பணிகளைத் தொடங்கிவிட்டனர். இந்த விடுமுறையானது இவ்வாண்டின் மிக நீண்ட விடுமுறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை

இதே போல நீண்ட விடுமுறை இவ்வாண்டுக்குள் கிடைக்குமா என்றால் வாய்ப்புகள் இல்லை என்று அறிகிறோம். இருப்பினும் அடுத்துத் தொடர்ந்து 5நாள்கள் விடுமுறை கிடைக்க இன்னும் சில வாரங்களே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் அதஹா

அமீரகத்தில் உள்ளவர்கள் இஸ்லாத்தின் புனிதமான நாள்களான அரஃபா நாள் மற்றும் ஈத் அல் அதஹா பண்டிகையுடன் வார இறுதி நாட்களையும் விடுமுறையாக அனுபவிக்கலாம். இது வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் வர இருக்கிறது. இருப்பினும் தற்போது இதற்கான அறிவிப்பு ஏதும் அறிவிக்கப்படவில்லை. சரியான விடுமுறை தேதிகள் ஈத் அல் அதஹாவின் நெருக்கத்தில் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

ஈத் அல் அதஹா என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் சந்திரன் அடிப்படையிலான அமைப்பின்படி, ஈத் அல் பித்ருக்கு சுமார் இரண்டு மாதங்கள் மற்றும் சில நாட்களுக்குப் பிறகு வருகிறது.

“இஸ்லாமிய நாட்காட்டி சந்திர சுழற்சியை நம்பியிருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு ஈத் பண்டிகைகளின் தேதிகளில் மாற்றங்களைக் காண்கிறது, ஆண்டுதோறும் தோராயமாக 10 முதல் 11 நாட்களுக்கு முன்னதாகவே முன்னேறும்” என்று ஷேக் அயாஸ் கூறினார். இவர் அல் மனார் இஸ்லாமிய மையத்தில் உள்ள NGS மற்றும் கதீப்பின் இமாம் ஆவார்.

அனைத்து இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் மாதங்களும் 29 அல்லது 30 நாட்கள் இரவு வானத்தில் பிறை நிலவு காணப்படுவதைப் பொறுத்து நீடிக்கும். இஸ்லாமிய நாட்காட்டியில் துல் ஹஜ் பிறை 9 அன்று அரஃபா தினம். ஈத் அல் அதஹா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஈத் விடுமுறை தேதிகள்

துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறை (IACAD) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, துல் ஹஜ் பிறை 1 சனிக்கிழமை அதாவது ஜூன் 8. வானியல் கணக்கீடுகளும் அதே தேதியைக் கணிக்கின்றன என்று துபாய் வானியல் குழுமத்தின் செயல்பாட்டு மேலாளர் கதீஜா அஹ்மத் கூறுகிறார்.

நீண்ட விடுமுறை வாட்கள் (Next long holiday in Emirates)

அப்படியானால், ஜூன் 16 (துல்ஹஜ் 9) ஞாயிற்றுக்கிழமை அரஃபா தினம். ஈத் அல் அதஹா பின்னர் ஜூன் 17 (துல் ஹஜ் 10) திங்கட்கிழமை. எனவே, விடுமுறை, ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை முதல் ஜூன் 19 புதன்கிழமை வரை. வார இறுதி நாட்களையும் (சனிக்கிழமை, ஜூன் 15) சேர்த்து, பண்டிகையைக் குறிக்க ஐந்து நாட்கள் விடுமுறை. பிறையைப் பொறுத்து இந்த தேதிகள் தேவைப்பட்டால் திருத்தப்படும்.

ADVERTISEMENT

ஈத் அல் அதஹாவின் முக்கியத்துவம்:

ஈத் அல் அதஹா என்பது தியாகத்தின் பண்டிகையாகும், மேலும் இது இஸ்லாத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இப்ராஹிம் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதற்காகத் தனது மகனைப் பலியிடத் தயாராக இருந்ததை நினைவுகூரும் வகையில் இந்த பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

follow our Facebook

இதையும் வாசிக்கலாமே..

அமீரகத்தில் ஒரு எமிரேட்டில் இருந்து மற்றொரு எமிரேட்டிற்கு செல்ல பொது பேருந்து!

Exploring the Top Shopping Malls in the UAE: Retail Heaven Awaits!

ADVERTISEMENT

Amazon Ads.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *