ஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு இருவர் கைது.

852

ஓடும் பேருந்தில் இளம்பெண் கற்பழிப்பு இருவர் கைது.

உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயதான பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர். இரவு 2 மணி அளவில் பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், லக்னோவுக்கும், மதுராவுக்கும் இடையே பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது இரவு 2 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

[the_ad id=”7251″]

பேருந்தின் கடைசி சீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: