கொரோனாவால் இறந்தவரின் இறுதிச் சடங்கை செய்த தமுமுகவினர். 

கொரோனாவால் இறந்தவரின் இறுதிச் சடங்கை செய்த தமுமுகவினர். 

222

கொரோனாவால் இறந்தவரின் இறுதிச் சடங்கை செய்த தமுமுகவினர்.

Tamil News: TMMK activists performed funeral of corona victim.

கொரோனாவால் இறந்தவரின் இறுதிச் சடங்கை செய்த தமுமுகவினர். தமுமுகவினர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் மருத்துவரின் இறுதிச் சடங்கை இந்து மத முறைப்படி நடத்தி வைத்ததுடன், அவரது உடல் தகனம் செய்யப்படும்வரை களத்தில் நின்றனர்.

கும்பகோணம் பக்தபுரி தெருவைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் விஷ்ணுபிரியா. 72 வயதான இவர் வீட்டின் அருகிலேயே நர்சிங் ஹோம் நடத்தி வந்தார். இந்த மாதம்  1-ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் தஞ்சாவூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சளி, இரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Tamil News:

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று மதியம் இறந்தார்.

இதுபற்றி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை ஐ.எம். பாதுஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச் சடங்கு நடத்தி தருமாறும், உடலை கும்பகோணத்திற்கு எடுத்துச் செல்ல உதவுமாறும் விஷ்ணுபிரியாவின் மகன் டாக்டர் பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இதைதொடர்ந்து, தஞ்சை பாதுஷா தலைமையில் உறவுகள் அறக்கட்டளையின் நிர்வாகி ஆலம் கான் மற்றும் தமுமுக தஞ்சை மாநகர துணைச் செயலாளர்கள் முகம்மது ரசூல், மன்சூர் அலி, சதாம் உசேன், ரபீக் மற்றும் நிர்வாகிகள் இத்ரிஸ், அஹமது, ஷானு, ஆகியோர் விரைந்து சென்று இறுதிச் சடங்கை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். tamil news today live

Perambalur News:

பின்னர், மருத்துவமனையில் பாதுகாப்பு கவசங்களுடன் தமுமுகவினர் மரணித்த மருத்துவரின் உடலுக்கு கெமிக்கல் வைத்து, பிரேதத்தை முறையாக மூடிய பிறகு தமுமுகவின் ஆம்புலன்சில் ஏற்றி அவரது சொந்த ஊரான கும்பகோணத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கே மயான நிலையத்தில் தமுமுக வடக்கு மாவட்டச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அப்துல் ரஹ்மான், அல் ஜலால், ரஹமத் அலி ஆகியோர் தயார் நிலையில் காத்திருந்தனர். மருத்துவர் விஷ்ணுபிரியா குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவரது உடல் தமுமுக நிர்வாகிகளால் இந்து மத முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மருத்துவர் விஷ்ணுபிரியாவின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் தமுமுக நிர்வாகிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

tag: tamil news, tamil news today live,
Leave a Reply

%d bloggers like this: