8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை

197

8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை

நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் பகுதிகளில் மிதமான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

[the_ad id=”7251″]

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், ஆம்பூரில் 4 செ.மீ மழையும், வால்பாறை மற்றும் போலூரில் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அதேபோல், பெருங்கலூர், நடுவட்டம், வந்தவாசி, ஓசூர், ஆலங்காயம், மேலளத்தூர், ஆரணி, சின்னகலார் மற்றும் செய்யாறு பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், வால்பாறை, பூதபாண்டி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வாணியம்பாடி, அரிமளம், திருப்பத்தூர், ஊத்தங்கரை, சூளகிரி, தாள்ளி, காவேரிப்பாக்கம், விரிஞ்சிபுரம், வேலூர் மற்றும் செஞ்சி பகுதிகளில் தலா செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: