கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அறிவிப்பு.

517

கொரோனாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அறிவிப்பு.

கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை அவிஃபாவிர் வைரஸ் தடுப்பு மருந்தின் முதல் தொகுதி மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இதுவரை உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.22 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப முறையான மருந்துகள் கண்டுபிடித்து இதுவரை சந்தைக்கு வரவில்லை. கொரோனா வரமால் தடுக்க தடுப்பூசியும் இல்லை. தடுப்பூசி தயாரிப்பு பரிசோதனைகள் அளவில் தான் உள்ளன.

[the_ad id=”7251″]

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை ரஷியா அறிவித்துள்ளது. அவிஃபாவிர் (Avifavir) என்ற இந்த மருந்து நாட்டின பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் என ரஷிய அரசு இன்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசின் 50 சதவீத முதலீடு உள்ள கெம்ரார் (ChemRar) என்ற நிறுவனம் இந்த புதிய மருந்தை உற்பத்தி செய்கிறது. நாட்டில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால், மிகவும் குறைந்த சமயத்தில், சோதனைகள் நடந்து வரும் நிலையிலேயே இந்த மருந்துக்கு ரஷிய சுகாதார அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.

[the_ad id=”12149″]

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் மற்றும் கெம்ரார் குழுமம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தொகுதி அவிஃபாவிர் மருந்தை ரஷ்ய மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ளதாக ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாதந்தோறும் 60000 பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும், 10 நாடுகள் இந்த மருந்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ரஷிய மருந்து கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.

[the_ad id=”7252″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: