வெறிச்சோடிய அசாம் மாநிலம்! Assam fled

வெறிச்சோடிய அசாம் மாநிலம்!

164

வெறிச்சோடிய அசாம் மாநிலம்!

அசாம் மாநிலத்தில் வெறிச்சோடிய முக்கிய நகரங்கள்! 

State of Assam fled

அசாம் மாநிலத்தில் அம்மாநிலத்தில் முக்கிய நகரங்களில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.

கொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்தது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல கட்டங்களை தொடர்ந்து தற்போது ஜூன் மாதத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எனினும் நாட்டின் பல பகுதிகளில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அசாம் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு 6500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உள்ளது.

இதனையடுத்து அம்மாநிலத்தில், கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களிலும், காமரூப் மாவட்டத்திலும் நேற்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்து. மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைள் வெறிச்சோடி  காணப்படுகின்றன.

tags: tamilnews

gulftamilnews
Leave a Reply

%d bloggers like this: