Rising rat fever

இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி!

204

இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சலால் அதிக உயிர்பலி!


Tamil News: Rising rat fever kills more in Sri Lanka.


கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி உலக மக்களை கொன்று வரும் நிலையில் இலங்கையில் எலி காய்ச்சல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இலங்கையில் 4,554 பேர் இந்த எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 37 பேர் இந்த எலி காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டின் தொற்றுநோய் பிரிவு மருத்துவர் தெரிவித்துள்ளார். Srilanka news

இலங்கையில் இரத்தினபுரி மாவட்டம் எலி காய்ச்சலுக்கு அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அங்கு மட்டும் 1146 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மொனராகலை மாவட்டத்தில் மட்டும் இதுவரை எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஒருவர்கூட அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். Srilanka news

கொரோனா வைரஸ் பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அண்டை நாடான இந்தியாவில் குறிப்பாக அருகில் உள்ள தமிழ்நாட்டில் மிக அதிக பாதிப்பு பதிவாகிவரும் போதும் இலங்கையில் இதுவரை கொரோனாவால் 12 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் எலி காய்ச்சலுக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

keyword: Tamil News, Tamil news today, daily tamil news, Srilanka news

தொடர்புடைய செய்திகள்

Home with below post




Leave a Reply

%d bloggers like this: