ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவன்.

160

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 8ம் வகுப்பு மாணவன்.

சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ளது நடிகர் ரஜினிகாந்த்தின் வீட்டுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. எனினும், இந்த செயலில் ஈடுபட்ட நபர் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த விசாரணையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் மிரட்டல் விடுத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளி மாணவன் மற்றும் அவனது தாயாரிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

[the_ad id=”7251″]

அப்போது, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவனது தாய் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தான் கேட்டது கிடைக்காவிட்டால் செல்போனை வைத்து கொண்டு இதுபோல் மிரட்டல் விடுப்பதை மாணவன் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரிய வந்தது.

அவனது செல்போனில் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனினும், 108 எண்ணுக்கு அழைத்து மிரட்டல் விடுத்தது விசாரணையில் உறுதியானது. இதனை தொடர்ந்து, பள்ளி மாணவனை காவலர்கள் எச்சரித்து அனுப்பினார்.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: