ஆக.10 சிறிய வணக்க ஸ்தலங்களுக்குச் செல்ல அனுமதி

ஆக.10 முதல் சிறிய வணக்க ஸ்தலங்களுக்குச் செல்ல அனுமதி: முதல்வர் உத்தரவு

252

ஆக.10 முதல் சிறிய வணக்க ஸ்தலங்களுக்குச் செல்ல அனுமதி: முதல்வர் உத்தரவு


Tamil Nadu News: Permission to go to small places of worship


வரும் 10-ம் தேதி முதல் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, இன்று (ஆக.8) முதல்வர்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“தமிழக அரசு, கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Perambalur News:

ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள், சிறிய மசூதிகள், தர்க்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தற்போது மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய கோயில்கள்; அதாவது, 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்க்காக்களிலும், தேவலாயங்களிலும் மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் வரும் 10 ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.

Ariyalur News: 

சென்னை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பெற வேண்டும்.

அதேபோல், அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

keyword: Tamil Nadu News, Tamil News daily

Gulf News Tamil
Leave a Reply

%d bloggers like this: