கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.India's first vaccine 

கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.India’s first vaccine

257

கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.India’s first vaccine

India’s first vaccine discovery for Corona.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல் முறையாக, முதல் தடுப்பு மருந்தை first vaccine ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாளர் அமைப்பு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து இந்த பரிசோதனை தொடங்க உள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம்(என்ஐவி) ஆகியவற்றுடன் சேர்ந்து கூட்டாகக் கண்டுபிடித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.India's first vaccine 

கிளிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும்பரிசோதனையும் முடித்துள்ளநிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தை செலுத்தி பரிசோதி்க்க பாரத் பயோட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத் பயோெடக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஐசிஎம்ஆர், என்ஐவி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி தற்போது “கோவாக்ஸின்” எனும் மருந்தை கண்டுபிடித்துள்ளோம். முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து பாரத் பயோடெக்கின் பிஎஸ்எல்-3 அதிநவீன பாதுகாப்பு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன அப்ளிகேஷனுக்கு இந்தியாவில் தடை.

கிளினிக்கல் பரிசோதனைக்கு முந்தைய ஆய்வுகள், பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த விளக்கம் ஆகியவற்றை அளித்தபின் மனிதர்களுக்கு 2 கட்டங்களாக பரிசோதிக்க எங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய மருந்து தரகக்கட்டுப்பாடு அமைப்பும் அனுமதி வழங்கியுள்ளது.

கோரோனாவுக்கு இந்தியாவின் முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.India's first vaccine 2020, ஜூலை மாதத்திலிருந்து நாடுமுழுவதும் இந்த மருந்து மனிதர்களுக்கு பரிசோதிக்கும் ஆய்வு நடத்தப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாரத் பயோடெக் நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில் “கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே கோவாக்ஸின் மருந்தை கண்டுபிடித்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம். ஐசிஎம்ஆர், என்ஐவி ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து இந்த மருந்தை தயாரித்துள்ளோம்.

இந்த திட்டத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனமும் அனைத்து ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கியது. எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவு இரவுபகல் பாரமல் உழைத்து இந்த திட்டத்தை வெற்றியாக்கியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

tags: tamil news

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: