Husband suicide in shame

மனைவி குவித்த லஞ்சப் பணம்: அவமானத்தில் கணவன் தற்கொலை.

332

மனைவி குவித்த லஞ்சப் பணம்: அவமானத்தில் கணவன் தற்கொலை. Husband suicide in shame.

அதிகளவு லஞ்சப் பணத்தை வாங்கி குவித்த பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கணவர் அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் வருவாய்த்துறையில் அதிகாரியாக உள்ளார். சுஜாதா மீது ஊழல் மற்றும் லஞ்ச புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அவர் வீட்டைச் சோதனை செய்துள்ளனர். லட்சக் கணக்கில் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

[the_ad id=”7251″]

ஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு.

கர்ப்பிணி பெண்ணாக பெண்குயின் திரைபடத்தில் கீர்த்தி சுரேஷ்.

மேலும் இந்த வழக்கில் அவரின் கணவர் அஜய்குமாருக்கும் சம்பந்தம் இருக்கும் எனக் கருதிய காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இந்நிலையில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து நேற்று அஜய்குமார் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி கைதால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் அவமானத்தால் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

[the_ad id=”7250″]

tag: india news

gulf tamil news




Leave a Reply

%d bloggers like this: