தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.  

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு.

253

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு. Heavy rainfall is expected in 8 districts of Tamil Nadu.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமாலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 29) பலத்த மழை பெய்யக்கூடும். சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கொரோனா பாதிப்பு 1 கோடியை கடந்தது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 30 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், கோவை மாவட்டம் சோலையாா், திருப்பத்தூா், தேனி மாவட்டம் பெரியாற்றில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் திங்கள்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 2-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tags: tamilnews
Leave a Reply

%d bloggers like this: