இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை (corona testing)

இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை.

270

இனி வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை.

Corona testing can be done at home
காய்ச்சல் இருக்கிறதா என்று கண்டறிய தெர்மாமீட்டர்களை வீடுகளில் வைத்திருக்கிறோம்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை அறிவதற்கு வீடுகளில் குளுக்கோ மீட்டர்கள் உள்ளன.
இதயத்தில் இருந்து வருகிற ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கண்டறிவதற்கு ஆக்சி மீட்டரையும் வீடுகளில் வாங்கி வைக்கத் தொடங்கி விட்டோம்.
இந்த வரிசையில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியவும் ஒரு கருவியை இனி வீடுகளில் வாங்கி வைக்கும் நிலை வெகுதொலைவில் இல்லை. ஆச்சரியமாக இருந்தாலும் இது உண்மைதான், நம்புங்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 95 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் 82 லட்சத்து 27 ஆயிரத்து 802 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கூட, உலக நாடுகளிலேயே கொரோனா பரிசோதனை (corona-testing) மிக குறைவான அளவில் நடைபெறுகிற நாடு இந்தியா என்ற குற்றச்சாட்டு இன்னும் தொடர்ந்து நிலவத்தான் செய்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான கொரோனா பரிசோதனை (corona testing)  இன்னும் சவாலாகத்தான் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

வெறிச்சோடிய அசாம் மாநிலம்!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு நடத்தப்படுகிற பரிசோதனை ஆர்.டி.பி.சி.ஆர். என்று அழைக்கப்படுகிறது. இதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மரபணு பொருள் கண்டறியப்படுகிது.

இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை எளிமையாக வீடுகளிலே செய்து கொள்ளத்தக்க வகையில் ஒரு எளிய கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களும், புனே தேசிய ரசாயன ஆய்வுக்கூடத்தினரும் இணைந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த கருவியைக் கொண்டு தனிப்பட்ட நபர்கள் வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்ளலாம். இதில் விரைவான முடிவும் தெரிய வந்து விடும்.
இந்த கண்டுபிடிப்பு திட்டம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பின் வழிகாட்டலில் செய்யப்படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் நிதி உதவியும் அளித்துள்ளது.
இந்த கருவியானது இன்னும் ஒரு மாத காலத்தில் வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம், ‘எலிசா’ அடிப்படையிலான நோய் அறிதல் முறையின் அடிப்படையிலானது. இந்த திட்டம் வெற்றிகரமானதாக அமைந்து விட்டால், கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை பெறுவதற்கு விரைவான, வலுவான, மலிவான பரிசோதனை கருவி கிடைத்து விடும்.

தற்போது மேற்கொள்ளப்படுகிற ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முறையில் மாதிரியை சேகரிப்பதிலும், கையாள்வதிலும் உள்ள ஆபத்து இதில் குறைந்துவிடும் என்கிறார் டெல்லி ஐ.ஐ.டி. ரசாயன பொறியியல் துறை பேராசிரியர் அனுராக் எஸ். ரத்தோர்.
இதுபற்றி அவர் கூறுகையில், ஐ.ஜி.ஜி. மற்றும் ஐ.ஜி.எம். அடிப்படையிலான எலிசா மதிப்பீடுகள் மற்றும் வீட்டு அடிப்படையிலான பரிசோதனை கருவிகளை உருவாக்குவதின்மூலம் இந்த ஆபத்தை குறைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்த புதிய பரிசோதனை corona testing கருவி என்ன விலையில் கிடைக்கும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் தற்போது வழக்கத்தில் உள்ள பரிசோதனை கருவியை விட மலிவான விலையில் கிடைக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இதில் ஒரு மாத காலத்தில் உறுதியான சில முடிவுகளை பெற வேண்டியதிருக்கிறது என்றும் கூறினார்.
கொரோனா பரிசோதனை corona testing செய்து கொள்வதற்கு இந்த கருவி மட்டும் வந்து விட்டால், கொரோனா தொற்றை கண்டறிவது மிக மிக எளிதாகிவிடும்.Leave a Reply

%d bloggers like this: