இந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு. 

150

இந்தியாவில் கொரோனா: குணமடையும் விகிதம் 53.79 சதவீதம் அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குணமடையும் விகிதம் 53.79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில், 10,386 கொவைட்-19 நோயாளிகள் குணமாகியுள்ளனர். இதுவரை, கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,04,710 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 53.79 விழுக்காடாக அதிகரித்துள்ளது. தற்போது 1,63,248 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

[the_ad_placement id=”after-content”]

 

அரசு பரிசோதனைச் சாலைகள் 703 ஆகவும், தனியார் பரிசோதனைச் சாலைகள் 257 ஆகவும் (மொத்தம் 960) அதிகரித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், 1,76,959 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 64,26,627 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மருத்துவமனைகளில் கொவைட் மற்றும் கொவிட் அல்லாத மருத்துவப்பிரிவுகளில் பணி புரியும் மருத்துவ பணியாளர்களுக்கான ஆலோசனை நெறிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 13,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

[the_ad id=”12149″]

 

[the_ad id=”7252″]
Leave a Reply

%d bloggers like this: