complaint against popular news paper

பிரபல பத்திரிக்கை மீது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு புகார்.

121

பிரபல பத்திரிக்கை மீது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு புகார். complaint against popular news paper.

கொரோனா தொற்றால் இறந்தவர் ‘இஸ்லாமியர்’ என அவரது மதத்தை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் அனைத்து சிறுபான்மை கட்சிகள், இயக்கங்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஜுன் 13-ம் தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் 2-ம் பக்கத்தில் ‘தஞ்சையில் கொரோனா பலி இரண்டாக உயர்வு : துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர் சாவு’ என்ற தலைப்பில் செய்தி பிரசுரமானது.

[the_ad id=”7251″]

அச் செய்தியில், இறந்தவர் அம்மாபேட்டையைச் சேர்ந்த 54 வயது இஸ்லாமியர் என அவரது மதத்தை அடையாளப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன்மூலம் மத்திய. மாநில அரசுகள் மற்றும் இந்திய பிரஸ் கவுன்சிலின் வழிகாட்டுதல்களை மீறப்பட்டுள்ளது என்றும் அவரது மதத்தை அடையாளப்படுத்தி சமூகத்தில் வெவ்வேறு பிரிவினருக்கிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என்றும் அந்த புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான மற்ற அனைவரையும் ஆண்-பெண் என மட்டும் குறிப்பிட்டு செய்தி போட்டுள்ள நிலையில், கொரோன தொற்றில் இறந்த இவர் ‘இஸ்லாமியர்’ என அவரது மதத்தை அடையாளப்படுத்தி செய்தி போட்டிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது ஆகும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

இச்செய்தி சிறுபான்மை மக்களையும், ஜனநாயக எண்ணமுள்ள நடுநிலையாளர்களையும் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. எனவே, இச் செய்தியை எழுதிய, வெளியிட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்;

இறந்தவரை அவரது மதத்தை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்டதற்காக இஸ்லாமிய சமுதாய மக்களிடம் தினத்தந்தி நிர்வாகம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதை தினத்தந்தி நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தஞ்சை மாநகர தலைவர் எச். அப்துல் நசீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் எஸ்.எம். ஜெயினுல் ஆபிதீன், தஞ்சை மாநகர காங்கிரஸ் (சிறுபான்மை பிரிவு) தலைவர் எஸ். காலித் அகமது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முகம்மது இக்பால், ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஐ. முகம்மது அப்பாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

source: angusam.com

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: