Madras Corona Infection Details.

சென்னை கொரோனா தொற்று விவரம்.

130

சென்னை கொரோனா தொற்று விவரம். Chennai Corona Infection Details.

தமிழகம் முழுவதும் நேற்று 2,174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதில் 1,276 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவர். ஒட்டுமொத்த தமிழகத்திலும் 50,193 பேருக்கு கொரோனா வைரைஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (17.06.2020) ஒரே நாளில் மட்டும் 842 பேர் கொரோனா தொற்றின் சிகிச்சையிலிருந்து மீண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 27,624 பேர் தமிழகத்தில் சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 21,990 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

[the_ad id=”7251″]

ஊரடங்கு அமலாகும் இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு.

கொரோனா விசயமாக உங்களுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். 

நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயினால் 48 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றால் 576 பேர் இறந்துள்ளார்கள்.

சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (17.06.2020) வருமாறு:

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 762

[the_ad id=”7251″]

இன்று (ஜூன் 18 ஆம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மட்டும் 35,556 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 19,027 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் மூலம் மீண்டுள்ளனர். அவர்கள் அனைவருமு் வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 461 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் தற்போது 16,067 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,626 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 4,549 பேருக்கும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4,334 பேருக்கும், மணலி மண்டலத்தில் 503 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: