தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் பீலா ராஜேஷ் மாற்றம்!

295

தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில் பீலா ராஜேஷ் மாற்றம்!

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்.. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம்செய்து தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஜெ. ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் ஜெ. ராதாகிருஷ்ணன் கூடுதலாகக் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[the_ad id=”7251″]

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிக வரித்துறை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாள்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே சுகாதாரத் துறை செயலாளராக இருந்த ஜெ. ராதாகிருஷ்ணனை மீண்டும் அந்த துறைக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2012 –  2019ம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஜெ. ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

[the_ad id=”12149″]

 

[the_ad_placement id=”after-content”]
Leave a Reply

%d bloggers like this: