தஞ்சையில் 213 வயது கொண்ட நீதிமன்றத்திற்கு ஒய்வு

தஞ்சையில் 213 வயது கொண்ட நீதிமன்றத்திற்கு ஒய்வு: புதிய நீதிமன்றம் திறப்பு

147

தஞ்சையில் 213 வயது கொண்ட நீதிமன்றத்திற்கு ஒய்வு: புதிய நீதிமன்றம் திறப்பு

213-year-old court in tanjore: Opening new court.

தஞ்சாவூர் ராஜராஜன் மணிமண்டபம் அருகே ரூ 39.56 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தை சென்னை உயர் நீதமன்ற தலைமை நீதிபதி அம்ரேஸ்வர் பிரதாப் சாகி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதிதாக திறக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டடத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு குத்துவிளக்கு ஏற்றிவைத்து நீதிமன்ற அறைகளைப் பார்வையிட்டார்.

சுமார் 13.13 ஏக்கர் பரப்பளவில் 1.55 லட்சம் சதுரஅடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தில் 18 நீதிமன்ற அறைகள், வழக்கறிஞர்களுக்கான அறைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்.

இத்திறப்பு விழா நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி வி.சிவஞானம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, 213 வயதாகும் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்ற கட்டடம் நேற்றுடன் ஓய்வு பெற்றது. தஞ்சையில் ஜில்லா நீதிமன்றம் 1806-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

tags: thanjavur  tanjore

gulf tamil news
Leave a Reply

%d bloggers like this: