2 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று! Corona virus crosses 2 lakhs!

2 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று!

180

2 லட்சத்தை கடந்தது கொரோனா தொற்று!

சவூதி அரேபியாவில் கரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்தை கடந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 2 லட்சத்தை கடந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதிதாக மேலும் 4,193 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின்  மொத்த எண்ணிக்கை 2,01,801 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளதாவது:  சவூதி அரேபியாவில் புதிதாக 4,193 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2,01,801 -ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 1,802 ஆக உயர்ந்துள்ளது, 2,945 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,40,614ஆக அதிகரித்துள்ளது.

பெரம்பலூர் அருகே மருந்து கழிவுகளுடன் வந்த லாரி சிறைபிடிப்பு.

இதற்கிடையில், குணமடைந்தவர்களின் இரத்த பிளாஸ்மா மூலம் 100 க்கும் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்,  இந்த சிகிச்சை நாடு தழுவிய மருத்துவ ஆய்வின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சவுதி அரேபியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன. பிப்ரவரி மாதம், சீனாவில் கொரோனா தீவிரம் அடைந்த நேரத்தில் தொற்றை எதிர்த்துப் போராட ஆதரவை வழங்கிய சவுதி அரேபியா, மார்ச் 11 இல் சீனாவின் வூஹானுக்கு மருத்துவ உதவியை அனுப்பியது.

சவூதி அரேபியாவில் தொற்று பரவியதை அடுத்து, எட்டு சீன மருத்துவ நிபுணர்கள் குழு ஏப்ரல் 15 ஆம் தேதி  தொற்றை எதிர்ப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக சவூதி அரேபியா வருகை தந்தது.ஏப்ரல் 26 ஆம் தேதி சவுதி அரேபியாவின் கொரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்துவதற்காக இரு தரப்பினரும் 265 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். Corona virus

tag: tamil news
Leave a Reply

%d bloggers like this: